Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..
டிசம்பர் 21 ரசிகர்கள் எதிர்பார்த்து போட்டியிடப் போகும் 4 முக்கியமான படங்கள் மாரி 2, சீதக்காதி, கனா மற்றும் சிலுக்குவார் பட்டி சிங்கம். விஜய்சேதுபதி நடித்து வெளிவந்துள்ள படம் தான் சீதக்காதி என்ற படத்தில் இவர் ஆதிமூலம் என்ற ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

seethakathi-statue
இந்தப் படத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் 23 நிமிடங்கள் தான் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் படக்குழுவினர்கள் விஜய்சேதுபதி கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வருவதாக கூறியுள்ளனர். இது பொய் என்று தெரிந்த டிஸ்ட்ரிபியூட்டர் அப்படக்குழுவினர் மிகக் கோபமாக கண்டித்துள்ளார் இது மிகப்பெரிய தவறு என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இப்படக்குழுவினர் ஆதிமூலம் என்று விஜய் சேதுபதி நடித்துள்ள அந்த கேரக்டரை பெரிய மால்களில் வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். இது மக்களை ஏமாற்றும் ஒரு விதமான விளம்பரமாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குசேலன் படம் வெளிவரும் போது தான் ஒரு கெஸ்ட் ரோலில்தான் நடித்திருப்பதாகவும் பசுபதி தான் இதில் ஹீரோவாக நடித்து உள்ளார் என்று வெளிப்படையாகக் கூறினார்.
ஏமாற்று வலையில் சிக்கிய விஜய் சேதுபதி அவரை வைத்து பல கோடி மற்றும் படத்தை விளம்பரப்படுத்த பெரிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதேபோல் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விஜய்சேதுபதியும் வாய்திறந்து தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதாக கூறினால் மட்டுமே உண்மை வெளிவரும். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற விஜய் சேதுபதி கண்டிப்பாக இதனை பற்றி வெகு விரைவில் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
