fbpx
Connect with us

Cinemapettai

7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.

திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த விஜய் சேதுபதியை ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி மீது விஜய் சேதுபதிக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. மக்கள்செல்வன் என்ற தலைப்பை சேதுவுக்கு அளித்ததும் சீனு ராமசாமி தான். அவர் எப்போது அழைத்தாலும் கதையோ, சம்பளமோ கேட்காமல் நடிக்க கிளம்பி போய்விடுவேன் என்பது விஜய் சேதுபதி சொல்லும் ஓபன் ஸ்டாட்ட்மென்ட்.

Vijay-Sethupathi-Seenu-RamasamyYSR பிலிம்ஸ்

யுவனின் தயாரிப்பு நிறுவனம். பியார் பிரேமா காதல் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளனர். இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பை முன்பே நம் தளத்தில் தெரிவித்திருந்தோம்.

யுவன் தயாரிக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசை மற்றும் யுவன் அமைக்கிறார்கள் என்று.

இப்படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளது.

YSR films

இப்படத்தில் ஹீரோயினாக காயத்ரி நடிக்கவுள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ் சீதக்காதி, ஆகிய படங்களை தொடர்ந்து 7வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்.

YSR films

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top