fbpx
Connect with us

Cinemapettai

சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் ஐடியா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் ஐடியா

சீனு ராமசாமி புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, சினிமாவில் தடம் பதித்தவர். யதார்த்த சினிமா எடுப்பதில் வித்தகர். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாழ்வியலை ஒட்டி பயணிக்கும் இவரின் படங்கள். மண்ணுக்காகவும், மக்களுக்காக மட்டுமே படம் எடுப்பவர் என்றால் கூட அது மிகையாகாது.

இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, தமிழ் சினிமாவை ஆரோக்யமான இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

“ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று இலவசம், பாப்கார்ன் பாதி விலை, வண்டி பார்க்கிங் இலவசம்; என புதுமுகங்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு காம்போ ஆபர் செய்தால் அதிக நபர்கள் திரையரங்கம் வருவார்கள். சிறந்த துவக்கம் கிடைக்கும். மேலும் நல்ல சினிமா மற்றும் திறன் உள்ளவர்கள் வளருவார்கள். இது எனது ஆசை.” என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top