இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்து வட்டிக் கொடுமையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்புச்செழியனுக்கு சினிமா துறையின் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் முதல் ஆளாக அவருக்கு ஆதரவாக ட்வீட் போட்டவர் நம் சீனு ராமசாமி.

தீடீரென்று நேற்று தன்னுடைய  நிலைப்பாட்டை அப்படியே  மாற்றி, தனது டுவிட்டர் பக்கத்தில் வேறு விதமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

” நெஞ்சம் நிறைந்த நண்பர்களுக்கு வணக்கம்,

பார்த்து பேசி ஒரு படம் எங்கள் கம்பெனி தயாரிப்பில் செய்யுங்கள் என்று வாக்குறுதியும் நம்பிக்கையும் தந்த அன்பர் நண்பர் திரு.அசோக்குமாரின் துக்க கரமான முடிவு, நெஞ்சடைத்து நான் உறைந்தேன். என் குடும்பத்திலும் இது போன்ற இழப்புண்டு. இதற்கு ஆறுதல் எவரும் சொல்ல முடியாது. நினைவில் கனவில் வந்து நிற்பர்.

அதிகம் படித்தவை:  ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் : பள்ளி வாரியாக தேர்ச்சி சதவீதம்!

நான் திரு.அன்புசெழியனின் சாதிக்காரன் இல்லை. வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவன் இல்லை. ஏன் நடிகர்களின் தேதியை பெற்று first copy கூட எடுக்கும் எண்ணமும் இல்லை. சம்பத்திற்கு மட்டும் படம் இயக்க வேண்டும் என்று நினைப்பவன்.

Vijay-Sethupathi-Seenu-Ramasamy

70 வருட சினிமா, பைனான்சியர்கள் தான் இயக்கி உள்ளனர். அரசு லோன் கிடையாது. சினிமாக்காரனுக்கு வீடு கூட கிடைக்காது.

ஒருமுறை விமான நிலையத்தில் செழியன் சிரித்துக் கொண்டே 20 கோடி பேலன்ஸ் அவர் தரனும், இவர் 30 கோடிண்ணே டீ சாப்புடுறீங்களா? என்றார். அவ்வளவு தான் எனக்கு அவரை புரியும். மூன்று பைசா வட்டிக்கு தருவாராம்.

அதிகம் படித்தவை:  இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டொனால்ட் ட்ரம்ப்

எங்கள் சங்கங்கள் தலையிட்டு சில நிபந்தனைகள் இட வேண்டும். அதிக பணம் பெறுதல் தேவைக்கதிகமாக வட்டியும் கட்டுதல் போன்ற சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

வியாபாரமும் கலையும் முட்டிக் கொண்ட துயரத்தில் உழைப்பாளி அசோக்கின் பிரிவுக்க ஆழ்ந்த இரங்கல்”.

அன்பன்

சீனுராமசாமி”  என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனு ராமசாமியின்  இந்த தீடீர் மன  மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற கேள்வி தற்பொழுது  எழுந்துள்ளது.