fbpx
Connect with us

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதராவாக பேசிய பிரபல இயக்குனர். கிளம்பியது புது சர்ச்சை.

News | செய்திகள்

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதராவாக பேசிய பிரபல இயக்குனர். கிளம்பியது புது சர்ச்சை.

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்து வட்டிக் கொடுமையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சீனு இராமசாமி

சீனு இராமசாமி புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்றுத், திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.

சினிமா உலகில் பலரும் அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் சீனு ராமசாமி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்பதிவை போட்டுள்ளார்

“எம்.ஜீ.ஆர், சிவாஜீ போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை, நான் நியாயத்தின் பக்கமே.”

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த கோரச் சம்பவத்தின் பொழுது இவர் தன் ட்விட்டரில் போட்ட பதிவு..

பொதுமக்களுக்கு ஒரு அவலம் நேர்ந்த பொழுது துடித்த சீனு ராமசாமி; தன் சக சினிமா ஊழியன் ஒருவன் விஷயத்தில்  இப்படி கருத்து சொல்லுவதால் பைனான்சியர் உத்தமரா ?

இவருடைய ட்வீட் தற்பொழுது நிலவி வரும் சூழலில் விவாதப் பொருள் ஆகிவிட்டது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top