சீனு இராமசாமி என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது முதல் திரைப்படம் பரத், பாவனா மற்றும் சந்தியா நடித்த கூடல் நகர் ஆகும். இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்றுத், திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது. மேலும் சாதனை படைத்தது.

தர்மதுரை 2016 இல் வெளியான திரைப்படமாகும். சீனு இராமசாமி அவர்களின் இயக்கத்தில் வந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் தமன்னா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டங்கே, கஞ்சா கறுப்பு ஆகியோர் நடித்திருந்தனர்.

ராதிகா சரத்குமார் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நான்காவது திரைப்படம் இது. பாடல்கள் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பால் ரசிகர்கள் மதிப்பில் நன்மதிப்பைப் பெற்றது.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்.

‘தர்மதுரை’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால் மாமனிதன் படம் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.Vijay-Sethupathi-Seenu-Ramasamy

விஜய்சேதுபதி கைவசம் இப்போது நிறைய படங்களில் நடித்து வருவதால ‘மாமனிதன்’ படத்திற்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்கவில்லையாம். எனவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக மாமனிதன் படத்துக்கு முன்னதாக ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் சீனுராமசாமி. இப்படியொரு முடிவுக்கு வந்த பிறகு அதர்வாவை சந்தித்து கதை சொன்னார் சீனு ராமசாமி. கதையைக் கேட்ட அதர்வா உடனடியாக கால்ஷீட் தர முன் வந்திருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  பைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதராவாக பேசிய பிரபல இயக்குனர். கிளம்பியது புது சர்ச்சை.

கிராமத்து பின்னணியில் நடக்கும் த்ரில்லர் கதையான இந்தப்படத்தில் அதர்வா கல்லூரி மாணவனாக நடிக்கிறார். கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. தமன்னா, அல்லது கேத்ரின் தெரசா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

சீனு ராமசாமி இயக்கம் ஒரு ஜீவன் அழைத்தது இந்த படமும் பல சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது,இவர் இயக்கிய அனைத்து படமும் ஒரு நல்ல கதை இருக்கும் அதே போல் இந்த படமும் இருக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. ரசிகர்கள் அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம் இந்த படத்தின் வெற்றியை.