கருத்து கந்தசாமியாக மாறிய சீனு ராமசாமி.. கோழிப்பண்ணை செல்லத்துரை எப்படி இருக்கு.? விமர்சனம்

Kozhipannai Chelladurai Movie Review: தர்மதுரை, நீர் பறவை, மாமனிதன் போன்ற படைப்புகளை கொடுத்த சீனு ராமசாமி தற்போது கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தை இயக்கியிருக்கிறார். யோகி பாபு, ஏகன், பிரகிடா, சத்யா தேவி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

ஹீரோ ஏகன் சிறுவயதாக இருக்கும் போதே அவருடைய அம்மா முறையற்ற காதலால் ஊரை விட்டு ஓடி விடுகிறார். இதனால் அவருடைய அப்பாவும் பிள்ளைகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விடுகிறார்.

அதன் பிறகு ஹீரோ ஊரில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகி பாபுவிடம் வேலைக்கு சேர்ந்து தன் தங்கையை வளர்கிறார். இருவரும் வளர்ந்த நிலையில் அதே ஊரில் பானை கடை வைத்திருக்கும் பிரகிடா ஹீரோவை காதலிக்கிறார்.

ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்க்கிறார். அந்த சூழலில் தங்கை ஒருவரை காதலிக்க தன் அம்மா போல் ஓடிவிடுவாரோ என காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது? தங்கையின் காதலை அவர் ஏற்றுக் கொண்டாரா? என்ற கேள்விக்கு விடையளிக்கிறது இப்படம்.

கோழிப்பண்ணை செல்லத்துரை எப்படி இருக்கு.?

சீனு ராமசாமி முந்தைய படங்களை மனதில் வைத்து பணத்தை பார்த்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும். அந்த அளவுக்கு திரைக்கதையில் பலவீனம் தெரிகிறது. அதிலும் பல இடங்களில் கருத்தாக சொல்லி கருத்து கந்தசாமி ஆகவே மாறி இருக்கிறார்.

சாதாரண கதைகளில் சென்டிமென்ட், காமெடி, கருத்து என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது இப்படம். அதிலும் சில தேவையில்லாத காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தாண்டி யோகி பாபு, ஹீரோ ஏகன், அவரின் தங்கையாக வரும் சத்யாதேவி அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.

அதேபோல் இசையும் ஓகே ரஹம் தான். ஆனாலும் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை. படம் பார்த்த பலரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. ஆக மொத்தம் கோழிப்பண்ணை செல்லத்துரை ரொம்பவே வீக்காக இருக்கிறார்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5

கோழிப்பண்ணை செல்லத்துரை வெற்றியா.?

- Advertisement -spot_img

Trending News