Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘முள்ளும் மலரும் காளியை மீண்டும் ரசித்தேன்’ – காலா ரஞ்சித்தை வாழ்த்திய இயக்குனர் !
Published on

காலா – கிங் ஆப் தாராவி
முந்தய சூப்பர் ஸ்டார் படங்களை போன்று அதீத ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான படம் காலா. பக்கா அரசியல் படம் என்றே இதனை சொல்ல வேண்டும். தன் அரசியல் காய்களை சரியாக நகர்த்துகிறார் ரஜினி சினிமா வாயிலாக என்றே சொல்லத் தோன்றுகிறது. மேலும் மாஸ் ஹீரோவாக சில வருடங்களாக நடித்து வந்த ரஜினியின் நடிப்பிற்கு இப்படம் வாய்ப்பு கொடுத்தது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த விட்டு இயக்குனர் சீனு ராமசாமி ரஞ்சித் அவர்களை தன் ட்விட்டரில் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
