Tamil Cinema News | சினிமா செய்திகள்
படம் வெற்றிபெற முடி காணிக்கை செலுத்திய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்
Published on

சீனு ராமசாமியின் இயக்கத்தில் “கண்ணே கலைமானே” படத்தில் தமன்னா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் உதயநிதி. ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரித்துள்ளார். பாடலக்ளை வைரமுத்து எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜலேந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் எடிட்டர்.
இப்படம் விவசாயம் சார்ந்த படம் என்றும் இதில் உதய் BSc அக்ரி முடித்த பட்டதாரியாக நடித்துள்ளார் என்றும் முன்பே தகவல்கள் வெளியாகின.
இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திருச்சந்தூர் கோவிலுக்கு சென்று அங்கு முடி காணிக்கை தந்தாக இயக்குனர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Seenu Ramasamy – Jalandhar Vasan
