Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீமாராஜா ரிலீஸ் ரத்து! திரும்பி சென்ற ரசிகர்கள்
சீமராஜா தியேட்டர்களில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தியேட்டர்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு போடப்படுவதாக இருந்த காட்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
வேலைக்காரன் பட வியாபாரத்தின் போது இருந்த நிலுவைத் தொகை 13 கோடி ரூபாயை திருப்தி தருவதில் பட தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டதே பட ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணம் என கூறப்படுகிறது. சீமராஜா படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை காண்பித்தும் கூட பைனான்சியர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

seemaraja
இதனால் இன்று படம் ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மற்றும் ஆன்லைனில் புக் செய்த டிக்கெட் திரும்ப கிடைக்குமா ? என்பதும் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர்.
