Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீமராஜா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

seemaraja sk samantha siva

எதிர்நீச்சல் படம் மூலம் நாயகனாக கோலிவுட்டில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில், பெண்ணாக வேடமிட்டு இவர் நடித்த ரெமோ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் வேலைக்காரன். ஜங்க் உணவுகளில் நிறைந்து இருக்கும் நச்சுக்கள் குறித்த படமாக அமைந்தது. தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா, இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக வலம் வருகிறார்.

இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர இருப்பது சீமராஜா. ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ’ரஜினிமுருகன்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் – பொன்ராம் இணைந்துள்ள இப்படத்திற்கு தற்போதே வரவேற்பு அதிகரித்து இருக்கிறது.

சிவாவுடன், சமந்தா முதல்முறையாக ஜோடி போட்டு இருக்கிறார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் சிவாவின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்பை முடிந்து சிலகாலம் படப்பிடிப்பு திரையுலக போராட்டத்தால் தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலக்கோணத்தில் தொடங்கப்பட்ட இருக்கிறது.

SK – Sivakarthikeyan -SEEMARAJA – FLP

இந்நிலையில், இரண்டாம் பாகத்திற்காக சிவா தாடி வளர்த்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இந்த கதாபாத்திரம் படத்தின் ப்ளாஷ்பேக்கில் வரும் இன்னொரு கதாபாத்திரத்துக்காக கூட இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் தாடியுடன் இருக்கும் சிவாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் சிவா இரட்டை கதாபாத்திரமாக இருக்கும் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து, சீமராஜா படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இப்படத்தில் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படப்பிடிப்புகள் தலக்கோணத்தில் நடைபெற இருக்கிறது. படத்தின் டப்பிங் வேலைகள் இந்த மாதம் 15ல் தொடங்க இருக்கிறது. ஜூன் மாத இறுதியில் படப்பிடிப்புகள் முடிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top