Seema-Raja
Seema-Raja

சீமராஜா திரைவிமர்சனம்.!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் அந்த லிஸ்டில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார், தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் இந்த நிலையில் இவர் பொன்ராம் இயக்கத்தில் சீமா ராஜாபடத்தில் நடித்துள்ளார்.

Seema-Raja
Seema-Raja

இந்த திரைப்படம் இன்றுஉலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது, படத்தில் நடிகை சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் சிம்ரன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் பரோட்டா சூரி காமெடியனாக அசத்தியுள்ளார் சீமா ராஜா வெற்றி வாகை சூடிய தான் என்று தற்பொழுது பார்க்கலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ வம்சத்தில் பிறந்தவர் இவர் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றி வருகிறார் ஆனாலும் இவரை ஊரே மதிக்கிறது, அது மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் போதுதான் சமந்தாவை சந்திக்கிறார், காதலிலும் விழுகிறார்.

இப்படி காதலில் விழுந்த சிவகார்த்திகேயன் சிங்கம் பட்டியை சேர்ந்தவர் சமந்தாவும் பட்டியை சேர்ந்தவர், ஆனால் இந்த இரண்டு ஊருக்கும் ஒரே மார்க்கெட் தான் பஞ்சாயத்து அதுமட்டுமில்லாமல் லால் சில விவசாய நிலங்களை மிரட்டி படித்துள்ளார் .

இந்த நிலையில் மார்க்கெட்டை அடைய சிம்ரன் மற்றும் சிவகார்த்திகேயன் மோதுகிறார்கள் மார்க்கெட் யாருக்கு என்பதற்கு ஒரு மல்யுத்த போட்டி நடக்கிறது, அதில் வழக்கம் போல் ஹீரோ தான் வெற்றி பெறுகிறார் பிறகு சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது தெரிய வருகிறது பின்புதான் சீமா ராஜா சமந்தாவுடன் காதலில் இணைந்தாரா.? லாரியில் அதிகாரத்தை அடக்கினார்? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதுதான் மீதமுள்ள கதை.

சீம ராஜாவாக சிவகார்த்திகேயன் படத்தில் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ அதாவது காமெடி நடனம் பாடல் ராஜா வேடம் என அனைத்திலும் மிரட்டியுள்ளார் தற்போது இவர் ஒரு முழு கமர்சியல் ஹீரோவாக மாறி விட்டார் படத்தில் mass intro மற்றும் பஞ்ச் வசனங்கள் என அசத்தியுள்ளார் ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக பஞ்சு வசனத்தை இடம் பிடிப்பது சிவகார்த்திகேயன் தான் ஒரு கட்டத்தில் சூரி அரசியலுக்கு கூப்பிடுகிறார் அதுபோல் கூட வசனம் உள்ளது.

படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் சிவகார்த்திகேயன் சூரி காம்போ தான், அவர்கள் வரும் ஒவ்வொரு இடத்திலும் நம்மை ஏமாற்றவில்லை காமெடியில் செம கலக்கு கலக்கி விட்டார்கள், அதுவும் நடிகர் சூரி சிறுத்தையிடம் மாற்றிக் கொண்டு அடிக்கும் கலாட்டா தியேட்டரில் சிரிப்பு  பறக்கிறது இவர்கள் இருவரும் வரும் படங்கள் அனைத்துமே காமெடிக்கு பஞ்சம் இருக்காது அதுபோல்தான் இந்த படமும் .

இதை தவிர படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை சிம்ரன் அவருடைய டப்பிங்கில் குரல் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை

அதேபோல் நடிகை சமந்தா கொடுக்கும் அனைத்து ரியாக்ஷன்களையும் கைவிட்டு எண்ணிவிடலாம் மேலும் லால், நெப்போலியன் என அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தில் சொதப்பி உள்ளார்கள் படத்தில் காமெடியா இல்லை கதையா என்று நினைக்கையில் பொன்ராம் கொஞ்சம் தடுமாறியுள்ளார், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு  சென்று சிவகார்த்திகேயனை களத்தில் இறங்கி இருந்தால் சூடு பிடித்திருக்கும் ஆனால் படம் எப்போது முடியும் என்ற மன நிலை வருகிறது .

டி இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ஆனால் பின்னணி கொஞ்சம் ஒரே மாதிரி இசை  சொதப்பலாக இருந்தது மேலும் படத்தில் ஒளிப்பதிவு அற்புதம் அதிலும் ராஜா போர்ஷன் சொல்லவே தேவையில்லை

படத்தில் பிளஸ் என்றால் அது சிவகார்த்திகேயன்-சூரி காமெடி தான் மேலும் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும்  கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம் ஏனென்றால் கடைசி வரை வில்லன் கதாபாத்திரம் வில்லனாக தெரியவில்லை .மொத்தத்தில் படத்தை பார்க்க வேண்டுமென்றால் சிவகார்த்திகேயன்-சூரி காமெடிக்காக கண்டிப்பாக போகலாம் அவர்கள் நம்மை ஏமாற்றவில்லை.

சீமராஜா : 2.5/5