Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீமராஜா படத்தால் சிவகார்த்திக்கேயனுக்கு இப்படி ஒரு நிலமையா.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்
நடிகர் சிவகர்த்திகேயன் சிமராஜா படத்தின் தோல்வியால் சில அதிரடி மாற்றங்களை தற்போது எடுத்துள்ளார், சீமராஜா படத்தினால் சிவகார்த்திகேயன் மற்றும் இவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவும் மிகப்பெரிய கடன் சுமையால் தவித்து வருகிறார்.
இந்த மிகப்பெரிய கடன் சுமைக்கு காரணமாக கூறப்படுவது வேலைக்காரன் மற்றும் சீமராஜா படங்களில் தேவையில்லாத அதிகப்படியான தயாரிப்பு செலவுகள் தான் என கூறுகிறார்கள் வேலைக்காரன் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டை படம் முடிந்த பின்பும் கலைக்காமல் ரசிகர்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள் படக்குழு அதனால் அந்த இடத்திற்கு கொடுக்கப்பட்ட வாடகை பல லட்சங்கள் என கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
அதேபோல்தான் சீமா ராஜா படத்திலும் அந்த படத்தில் இடம்பெற்ற பிளாஸ்பேக் காட்சிகளாக தேவையில்லாமல் 8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள் அப்படி அதிகமாக செலவு செய்தும் எதிர்பார்த்தபடி படம் ஓடாததால் இந்த படத்தில் கொஞ்சம் கடன் சுமை எகிறியது.
இதனால் தற்போது குறைந்த செலவில் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயனும் அவரின் ஆஸ்தான தயாரிப்பாளரும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள் இந்த நிலையில் இரும்புதிரை திரைப்படத்தின் இயக்குனர் மித்திரன் இயக்கத்தில் ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்க முடிவு செய்துள்ளார்கள் இந்த படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது
ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்து வந்தார் ஆனால் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் மேலும் இப்படத்திற்காக கலைஞர்கள் தேர்வு நடிகை, நடிகர் செலக்சன் நடைபெற்று வருகிறது.
மீண்டும் சிறிய பட்ஜெட் படத்தில் சிவா நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது.
