ரஜினி, கமல் ஒரு நாள் கூட அரசியலில் தாங்க மாட்டாங்க.. எச்சரித்த பிரபலம்

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. ரஜினிகாந்த் எப்பொழுது கட்சி தொடங்குவார், கட்சி பெயரை தெரிவிப்பார் என்று தொண்டர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் முதல்வர் வேட்பாளராக நிற்க மாட்டேன் என்றும், கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரு தொண்டனாக இருந்துபதவியில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் இடத்தில் மட்டுமே நான் இருப்பேன் என்று ரஜினிகாந்த் மேடையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இதனால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட இந்த முடிவுக்கு செவிசாய்க்கவில்லை. மேடையில் அவர் கூறியதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு முன்னேற்றமும் காட்சியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் மேடையில் கூறிய கருத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீமான் கூறியது என்னவென்றால், தான் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்று ரஜினி கூறியவுடன் அவர் மீதிருந்த முரண்பாடான கருத்துக்கள் நீங்கி விட்டதாகவும்.

ரஜினி, கமல் இருவருமே வயதிலும் திரைத் துறையிலும் அனுபவசாலியாக இருந்தாலும், அரசியலில் அவர்களைவிட மூத்தவன், அதிக அளவில் அவமானப்படுத்தப்பட்டு, கஷ்டப்பட்டு பத்து வருடங்களாக இந்த இடத்தைப் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

seeman
seeman

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமைதியை மட்டும் விரும்புபவர், இதனால் அரசியலுக்கு ஒரு நாள் கூட தாங்க மாட்டார் என்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் சீமான்.