Tamil Nadu | தமிழ் நாடு
அநாகரிகத்தின் ஆரம்பமே திமுக தான்! கனிமொழி கருத்துக்கு சீமான் பதிலடி.. வீடியோ

ஈழத்தமிழர்களைப் பற்றி கனிமொழி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாங்குநேரி தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்தால் தான் வாக்களிப்பார்கள் என்ற சூழ்நிலை ஏற்பட்டு ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் பண பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் பணம் கொடுத்தால்தான் வாக்களிப்பீர் என்ற சூழ்நிலை மாறி ஜனநாயகத்துக்கான வாக்கு அளித்தால் மட்டுமே நேர்மையான அரசியல் தமிழ்நாட்டில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களை எதற்காக கொன்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார், இதுபோன்ற அரசியல் தலைவர்கள் ஆவேசமாக பேசும் வீடியோக்களை பார்க்கும்போது இளைஞர்களுக்கு இடையே பெரும் தெளிவு ஏற்படுகிறது. ஆகையால் மக்கள் நல்ல தலைவர்களை நியாயமான முறையில் தேர்ந்தெடுப்பது தான் ஜனநாயகம்.
அநாகரிகத்தின் ஆரம்பமே திமுக தான்!
– கனிமொழி கருத்துக்கு சீமான் பதிலடி#Seeman #DMK #TamilGenocide #Congress #Nanguneri #ByElection #RajivGandhi #IPKF #Kanimozhi #LTTE #Prabhakaran pic.twitter.com/1ILaLvrXXJ
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) October 19, 2019
