Connect with us

Cinemapettai

கமல் சர்ச்சை பேச்சுக்கு சீமான் ஆதரவு..! அமேசான் நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டியதுதானே?

kamal-seeman

Politics | அரசியல்

கமல் சர்ச்சை பேச்சுக்கு சீமான் ஆதரவு..! அமேசான் நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டியதுதானே?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது உண்மைதான் என்று கூறியுள்ளார். அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆர்.எஸ்.எஸ்  அமைப்பு பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியாக இருப்பது ஒரு இந்து தான் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பிஜேபி மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் கமல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் முட்டை வீச்சு மற்றும் செருப்பை வீசும்  சம்பவத்தை நடத்தியுள்ளார்.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கூறுகையில் அவர் கூறியது வரலாற்று உண்மையாகும். கமலின் கருத்துக்களை வைத்து சுயலாபத்திற்காக அரசியல் செய்து வருகின்றனர் பிஜேபி என்று தெரிவித்துள்ளார்.

அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பொருள்களை ஆன்லைனில் விட்டு வருகின்றனர். நியாயமாக பார்த்தால் கமலுக்கு  ஆர்.எஸ்.எஸ் என்ன நெருக்கடி கொடுக்கிறார்களோ அதை விட பலமடங்கு அமேசான் நிறுவனத்திருக்கு கொடுத்து அந்நிறுவனத்தை மூட வைக்க வேண்டும்.

இதிலிருந்து தெரிகிறது அரசியல் சுயலாபத்திற்காக பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது  உறுதியாகியுள்ளது. கமல் சர்ச்சையாக இந்து மதத்தை பற்றி பேசி விட்டார் என்று கொந்தளித்த ஆர்எஸ்எஸ் அமைப்பு இவர்களையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதே மக்களின் கருத்து.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top