fbpx
Connect with us

பிரபாகரனை தலைவனாக்கியது சிங்களவன் – சீமான் பரபரப்பு பேச்சு

பிரபாகரனை தலைவனாக்கியது சிங்களவன் – சீமான் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அரசியலில் குதித்தவர் சீமான்.

இவரின் அரசியலில் இறங்க முக்கிய காரணம் ஈழத்து பிரச்சனைகள் தான். இவரது பெரும்பாலான பேச்சுக்கள் இதை மையப்படுத்தியே தான் இருக்கும். இவர் நேற்று ஈழம் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கருத்தில் உருவான கூட்டாளி படத்தின் திரையிடலில் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் பேசுகையில், தமிழனுக்கு என தனி நாடு உருவாக வேண்டும். தலைவன் உருவாவதை யாரும் தடுக்க முடியாது. தமிழ் தேசியத்தலைவர் பிரபாகரனை தலைவனாக்கியது தமிழனல்ல, சிங்களவன் தான். அவரது தலைக்கு ரூ.10 லட்சம் அறிவித்த போது தான், இவர் யார் என்று அனைவராலும் அறியப்பட்டார் என்றார். மேலும் ஈழத்தில் நடந்த கொடுமைகளை பற்றியும் தனது வழக்கமான உணர்ச்சிகரமான பேச்சில் சீமான் வெளிப்படுத்தினார்.

 

இந்த விழாவில் மறைந்த இயக்குனர் மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் பேரறிவாளன் தாயார், பாடகர் தேனிசை செல்லப்பா, இயக்குனர்கள் ரவிமரியா, பேரரசு, வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top