Connect with us
Cinemapettai

Cinemapettai

seeman-bjp

India | இந்தியா

பாஜகவின் பாலிசி சாதி, மதம், சாணி, பசுமாடு.. கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாஜகவை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 6ம் தேதி வரை வேல் ஏந்தி, முருகனை நோக்கி பயணம் செய்வதை கண்டித்து கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் பாஜகவை பற்றி பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்தக் கருத்துக்களை கேட்ட பாஜகவினர் ஆடிப் போயுள்ளனர்.

அதாவது, ‘பாஜகவுக்கு என்று அரசியல் எதுவுமே கிடையாது. மதத்தை தவிர எதுவுமே அவர்களுக்கு தெரியாது. நாட்டை விட தாங்கள் சார்ந்துள்ள மதம் தான் பெரிது என்று கருதி நமது நாட்டையே நாசம் செய்து கொண்டிருக்கின்றனர் பாஜகவினர்’ என்று குறிப்பிட்டுள்ளார் சீமான்.

இதனையடுத்து சீமான், ‘பாஜக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பிரச்சனையையும் 50 சதவிகித பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு உடைய பிரச்சனையும் மூடி மறைப்பதற்காகவே, வேலை எடுத்துட்டு ஒரு மாசத்துக்கு பயணம் போறோம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க’ என்று நச்சுனு உண்மையை உடைத்து கூறியுள்ளார்.

மேலும், ‘இவர்கள் இந்த யாத்திரையை நவம்பர் 1 முதல் டிசம்பர் 6ம் தேதி வரை நடத்த போறாங்களாம். டிசம்பர் ஒன்னு வரை நடத்த வேண்டியதுதானே? ஏன் டிசம்பர் 6 வரை நடத்துறீங்க? அண்ணல் அம்பேத்கருக்கு உரிய நாளும் பாபர் மசூதிக்கு மசூதியின் நினைவு நாளான அன்று குறிவைத்து பாஜக அடிப்பதற்கு காரணம் என்ன என்று?’ கடுமையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விளக்கம் தெரியாமல் திக்குமுக்காடி நிற்கின்றனர் பாஜகவினர்.

இறுதியாக பேசிய  சீமான், ‘பாஜகவிற்கு தெரிந்தது எல்லாம் சாதி, மதம், சாணி, பசுமாடு, ஜெய் ஸ்ரீராம் கோஷம், பாகிஸ்தான் மட்டும்தான்..  பசி, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, வன்கொடுமை, பொருளாதாரக் சீர்கேடு இதைப்பற்றி எல்லாம் பாஜகவிற்கு கவலையே கிடையாது. இதையெல்லாம் கற்றறிந்தவர்கள் யோசிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பாஜகவினர் தமிழகத்தில் எதற்காக இந்த மாதிரியான வேல் யாத்திரையை நடத்தப் போகிறார்கள் என்ற குழப்பத்தில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாமல் மக்களும் ஆழ்ந்துள்ளனர்.

Continue Reading
To Top