சமீபத்தில் நடந்த அனிதாவின் இரங்கல் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பா.ரஞ்சித் இருவரும் மேடையில் கார சாரமாக பேசிக்கொண்டது அனைவரும் அறிவர்.

அதில் ரஞ்சித் தலித்துகள் இன்னும் ஒடுக்கப்படுகிறார்கள். ஜாதி இன்னும் ஒழியவில்லை என்று கோவமாக பேசினார். இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் அவர்கள் “ரஞ்சித்தின் கோவம் ஞாயமானதே, அவர் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது. ரஞ்சித்தின் வேதனையும், ஆதங்கமும் அவர் இடத்தில் இருந்து பார்க்கும் போது உணரமுடிகிறது.
அதற்காக வெட்கி தலை குனியத்தான் வேண்டும். புரையோடிப்போன சாதியப் புற்றுநோய் நம் இனத்தை செல்லரித்து கொல்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். போராடுகிற எல்லாரும் அனிதாவை தங்கையாத்தான் பார்கிறார்கள். ரஞ்சித் தலித்தாக பார்கிறார். இது அவர் சிந்தனைக்கும் பேச்சுக்கும் ஆபத்தானது.

pa-ranjithபல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறார்கள். போராடும் அனைத்து மாணவர்களும் தலித் மாணவர்களா? எல்லா மாணவர்களும் போராடுவதுதான் வரலாற்று உண்மையாக பதிவாகும். இந்த உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்” என்று கூறினார்.

seemanசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: மாணவர்கள் எல்லாரையும் நம்புறாங்க நம்ம மக்களை போலவே.