வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

Mr.சீமான்! முதல்வர் கனவை இத்தோட விட்டுருங்க, விஜயலட்சுமி வெளியிட்ட புதிய வீடியோ!

வாழ்த்துகள் பட ஷூட்டிங்கின் போது சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறினார்கள். அதன்பின், சீமான் விஜயலட்சுமியை கண்டுக்காத நிலையில், அவரும் அண்டை மாநிலத்தில் போய் செட்டில் ஆனார். அதன்பின், சீமான் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் அரசியலில் பயணித்து வரும் நிலையில் அவ்வப்போது சீமானை கடுமையாக விமர்சித்து விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். சீமான் மீது காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திலும் இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதல்வர் ஆக்கப் போகிறார்களா?

இந்த நிலையில், விஜயலட்சுமி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான். ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியம் பற்றி கதைகளை பேசிவிட்டு, நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா, அம்மாவுக்குப் பிறந்தவன்னு கூறிட்டு இருங்கீங்க. அப்போ நான் என்ன இந்தி அப்பா, அம்மாவுக்கு பிறந்தவளா? நானும் தமிழ் அம்மா, அப்பாவுக்கு பிறந்தவள்தான்.

என்னை முதலைச்சர் ஆக்குங்கன்னு தமிழ் நாட்டு மக்கள்கிட்ட சொன்னீங்களே, ஒரு விசயத்துல கிளாரிட்டி கொடுங்க. அப்புறமா உங்களை முதல்வர் ஆக்கனுமா வேண்டாமான்னு அவங்களே முடிவு செய்வாங்க. போன வருசம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் பேங்க் அக்கவுண்ட்ல ரூ.50 ஆயிரம் பணம் போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக் கூடாது, நாம் தமிழர் கட்சியினர்க்குத் தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது, தமிழ் நாட்டு மக்களுக்கும் தெரியக் கூடாதுன்னு எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டு, எங்கிட்ட வீடியோ வாங்க ராத்திரி பகலா தொந்தரவு செய்தீர்கள். அதெல்லாம் தாங்க முடியாமதான் நான் வழக்கு தொடுத்தேன்.

அப்புறமா என் பெயரை கெடுக்கத்தான் திமுக விஜயலட்சுமியை கூட்டி வந்திருக்கு என்று பச்சையாக பொய் சொன்னீர்கள்.எதோ வாபஸ் கொடுத்திட்டு போய்விட்டா என்று நினைச்சிட்டு, உங்கள் மனைவி முன்னாடி நின்னு, “பழக்கத்திற்கு இவள்தான் கிடைத்தாளா என மனைவி கேட்டாள்” என சிரிப்பது தானா? உங்கள் யோக்கியதை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இதெயெல்லாம் பார்த்த பின்பு, தமிழ் நாட்டு மக்கள் உங்களை முதல்வர் ஆக்கப் போகிறார்களா? உங்களுக்கு உண்மை பேசிற யோக்கியதையே இல்ல. உங்கள மாதிரி துரோகிகள் கையில தமிழ் நாடு சிக்காது. தமிழ் உணர்வாளர்கள் யாரும் விடவும் மாட்டார்கள். அதனால முதல்வர் கனவை இத்தோட விட்டுருங்க. என் கண்ணீரும், என்னோட அக்காவோட கண்ணீரும் உங்கள சும்மா விடாது’’ என்று அந்த வீடீயோவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News