புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சீமான் எல்லாம் எங்க லிஸ்டிலேயே இல்ல, எங்கள் நோக்கமே வேற.. அதிரடியாக பதிலடி கொடுத்த TVK நிர்வாகி

TVK and NTK: தற்போது சோசியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் TVK நடத்திய முதல் மாநாடு பற்றி தான் பேச்சுக்கள் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் எதிர்பார்க்காத அளவிற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டதால் தான். இந்த மாநாட்டில் பேசிய தளபதி விஜய், அவருடைய குறிக்கோள்களையும் வெற்றியை நோக்கி மட்டும் பயணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அத்துடன் இவருடைய அனல் பறக்கும் பேச்சு அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களை பரவசப்படுத்தி விட்டது. அதிலும் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தாக்கும் விதமாக விஜய் சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் ஆணித்தரமாக இருந்தது. அதே நேரத்தில் விஜய்யின் கொள்கை பற்றியும் மாநாடு பற்றியும் ஓப்பனாக சீமான் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

அதுதான் தற்போது சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. அதாவது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். அதாவது நீங்கள் இப்பொழுது அரசியலுக்குள் நுழைந்துக்கிட்டு பெரியாரையும் அம்பேத்கரையும் பற்றி படித்து வருகிறீர்கள். ஆனால் உங்களுக்கு முன்னே நான் அதையெல்லாம் படித்து தெரிந்து பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறேன்.

அந்த வகையில் நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒன்னு நீங்கள் அந்த சாலையின் அந்த ஓரத்தில் நிற்க வேண்டும் இல்லை என்றால் இந்த ஓரத்தில் நிற்க வேண்டும். அதை விட்டுவிட்டு நடுவில் தான் நிற்பேன் என்று சொன்னால் லாரி அடித்து விடும் என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் விஜய்யை எதிர்மறையாக விமர்சித்து பேசி இருந்திருக்கிறார்.

சீமான் சொன்ன இந்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாக வெடித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீமானின் பேச்சுக்கு விஜயலட்சுமி வீடியோ மூலம் பதிலடி கொடுத்து விஜய்க்கு சப்போர்ட்டாக பேசி இருக்கிறார். அத்துடன் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி சம்பத்குமார் என்பவர் ஒரு அறிக்கையும் இது சம்பந்தமாக வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது சீமான் சொன்ன விமர்சனங்கள் அனைத்திற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள், சீமானையும் மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக கருதி விலகி செல்ல வேண்டும். TVK மாநாடு நடைபெறுவதற்கு முன்பும் தற்போது சீமான் பேசிய பேச்சுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. அதனால் அவர் சொன்ன விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இருந்தால் நம்முடைய வேலைகள் எதுவும் நடைபெறாது.

அதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு நிறைய வேலை இருப்பதால் அதனை தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். தற்போது விமர்சனம் செய்யும் ஒவ்வொருவருக்கும் அரசியல் களத்தில் மூலம் பதிலடி கொடுக்கலாம். ஏனென்றால் நாங்கள் பயணிக்க தொடங்கிப் பொழுது எங்களுடைய தலைவர் விஜய் கூறிய விஷயம் என்னவென்றால், இந்த பயணத்தில் யாரை விமர்சிக்க வேண்டும், யாரை கடந்து போக வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக எங்களுக்கு உணர்த்திருக்கிறார்.

அதனால் அதன்படியே நாங்கள் பயணம் செய்ய விரும்புகிறோம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது வருகிற 2026 ஆம் ஆண்டு TVK VS NTK என்று இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி இருக்கப் போகிறது.

- Advertisement -

Trending News