Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீயெல்லாம் என் தம்பியே இல்லை, விஜய்யை மோசமாக பேசிய சீமான்
விஜய்யை மோசமாக பேசிய சீமான்
சீமானின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் மாறியுள்ளன. அவரது கட்சி நாம் தமிழர் தொண்டர்களும் இவரது நடவடிக்கைகளை கண்டு வருத்தத்தில் உள்ளனர். ஓரளவுக்கு சம்பாதித்து வைத்திருந்த சோசியல் மீடியா தொண்டர்களையும் சீமான் இழந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அவருடைய விஜய் பற்றின பேச்சுகள் மிக மோசமானதாக இருந்தது. அதற்கு காரணம் என்னவென்று அலசிப்பார்த்தால், சீமான் விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி வைத்திருந்தார் விஜய்யும் முன்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் நாட்கள் ஆக ஆக விஜய் வேறு வேறு படங்களில் நடித்து சீமான் படத்தில் நடிக்க முடியவில்லை.
சீமானும் கட்சி பணிகளால் படத்தை எடுக்க முடியவில்லை, மீண்டும் விஜய்யிடமும் அந்த கதையை பற்றி பேசியுள்ளார் ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இந்த படத்தில் நடிக்க முடியாது என விஜய் கூறியுள்ளார். இதனால் வருத்தமடைந்த சீமான் சிம்புவிடம் இந்த கதையை சொல்லி இருக்கிறார். அவரும் ஓகே சொல்லிவிட்டார். இப்பொழுது சீமான் சிம்புவை வைத்து மூன்று படங்கள் இயக்க உள்ளார். அதில் ஒன்று விஜய் சொன்ன கதை.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் சீமானுக்கு கால்ஷீட் கொடுத்தால் அவரை தம்பி என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து பேசுவார். அதே கால்ஷீட் கொடுக்கவில்லை என்றால் அவரை தரம் தாழ்ந்து பேசுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்பொழுது சிம்புவை அடுத்து சூப்பர் ஸ்டார் என்றும் அவர்தான் என் தம்பி என்றும் கூறி வருகிறார் சீமான் இதுதான் அரசியல்.
சிம்புவை பற்றி சீமான் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பார் அவரை வைத்து படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒருவேளை அவரை வைத்து படம் எடுக்கும் பொழுது பிரச்சினைகள் ஏற்பட்டால் சீமான் திரும்ப அவரை தன் தம்பி இல்லை என்றும் வேறு ஒருவரை தம்பி என்றும், அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறுவார் என்பது மறுக்க முடியாது.
விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது ஏற்படும் பிரச்சினைகளால் விஜய் முதல்வரிடம் சந்திக்க நேரம் கேட்டு படத்தை ரிலீஸ் செய்ய உதவுமாறு கோரினார். இதனை சீமான் கிண்டலும் கேலியுமாக சொல்லி மேடையில் பேசி இருக்கிறார்.
பல கோடிகளில் பணம் செலவு செய்து படம் எடுத்து தயாரிப்பாளரின் நிலைமையை சீமான் சற்று புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அந்த படத்திற்கு ஆகும் வட்டியும், கடனும் ஒரு குடும்பத்தை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடும் இது ஏற்கனவே நடந்த நிகழ்வுதான்.
இதெல்லாம் சினிமாவில் இருந்த சீமான் அவர்களுக்கு ஒன்றும் தெரியாததுபோல் அரசியல் லாபத்திற்காகவும் தான் அடுத்த படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படியெல்லாம் பேசுவது சரியல்ல.
மேலும் கமல் கட்சி ஆரம்பிக்கும்பொழுது, கூட இருந்து சப்போர்ட் செய்துவிட்டு இப்பொழுது கமலையும் மோசமாக பேசியுள்ளார். ஜெயலலிதா இருக்கும்போது கமல் வாய் திறக்கவில்லை இப்போது பேசுகிறார்கள் என்று. இதேபோன்று முன்பு விஜயகாந்தை தவறாக பேசி விட்டு இப்பொழுது விஜயகாந்த் நல்ல தரமான ஆண்மகன், நல்ல தலைவர் என்று புகழ்ந்து வருகிறார்.
இதெல்லாம் பார்த்தால் ஏற்கனவே இருந்த திராவிட இயக்கங்களை பரவாயில்லை புதிதாக பதவி ஆசையில் வரும் சீமான் அதற்கு லாயக்கற்றவர் என்பது போல் தோன்றுகிறது. பல வருடங்களாக தங்கிய இடத்திற்கு வாடகை தராமல் இருந்த சீமான் அவர்கள் நியாயமாக பேசுவது அநியாயமாக உள்ளது.
