Tamil Cinema News | சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு

தயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு
சீமராஜா படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சங்க அனுமதி இல்லாமல் படக்குழு அறிவித்து இருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

seemaraja sk samantha siva
டிவியிலேயே தனக்கான ரசிகர்களை சேகரித்து கொண்டு எதிர்நீச்சல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லா படமுமே வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் வேலைக்காரன். ஜங்க் உணவுகளில் நிறைந்து இருக்கும் நச்சுக்கள் குறித்த படமாக அமைந்தது. படத்திற்கும் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா, இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக வலம் வருகிறார்.
இதில், சீமராஜா படம் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிறது. ஏற்கனவே, பொன்ராம் மற்றும் சிவாவின் கூட்டணியில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ’ரஜினிமுருகன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. சிவாவுடன், சமந்தா முதல்முறையாக ஜோடி போட்டு இருக்கிறார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இருக்கிறது. இதன் நிறைவு விழாவில், படத்தை விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 13ந் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இது தயாரிப்பாளர் சங்கத்தை கடும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.

SK – Sivakarthikeyan -SEEMARAJA – FLP
சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு பிறகு, வெளியிடப்படும் புதுப்படங்கள் உரிய தேதியை பெற்ற பிறகே அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி, மூன்று தேதிகளுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை ஆய்வு செய்யும் வெளியீட்டு வரன்முறை குழு, திரைப்படம் வெளியிடப்படும் தேதிக்கான ஒப்புதல் கடிதத்தை அளிக்கும். தொடர்ந்து, படக்குழு அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்து கொள்ளலாம். ஆனால் இதை மதிக்காமல் சீமராஜா குழு செய்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அதே தேதியில், வட சென்னை படமும் வெளிவர இருப்பதால் தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்தக்கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
