மும்பை: இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்தது போட்டி நிறுவங்களுக்கு மட்டும் தான் சிக்கல் என்று நினைத்தால் வைப்பை ரவுட்டர்கள் வணிகமும் படுத்து உறங்கியதாகக் கூறப்படுகின்றது.

இலவச 4ஜி தரவை வாடிக்கையாளர்களுக்கு அளித்ததன் மூலம் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டதோ அதே போன்று ரவுட்டர்கள் வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச டேட்டா கார்பரேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

காலாண்டு விற்பனை அறிக்கை

காலாண்டு விற்பனை அறிக்கை

சர்வதேச டேட்டா கார்பரேஷனின் அறிக்கை படி 2016-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் வைப்பை ரவுட்டர்கள் விற்பனையில் 22 சதவீதமும் ஏற்றுமதியில் 19 சதவீதமும் சரிவை கண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சரிவுக்குக் காரணம் செல்லா ரூபாய் நொட்டு அறிவிப்பு மற்றும் ஜியோ நிறுவனத்தின் சேவை துவங்கியது இரண்டும் ஆகும்.

 

குறைந்த விலை ரவுட்டர்கள் விற்பனை பாதிப்பு

குறைந்த விலை ரவுட்டர்கள் விற்பனை பாதிப்பு

ஜியோ நிறுவனத்தின் இலவச தரவு சேவை காரணங்களால் 5,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள வைப்பை ரவுட்டர்கள் வர்த்தகம் அதிலும் குறிப்பாக வீட்டில் இணையதளம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தரப்பில் இருந்து வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றது நெட்கியர், டிஜிசோல் மற்றும் டிபி லின்க் போன்ற நிறுவனங்களின் வியாபாரப் பிரிவுகள்.

ஜியோ இலவச சேவை

ஜியோ இலவச சேவை

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மார்ச் 31-ம் தேதி வரை இலவச இணையதளம் வழங்கி வந்ததால் தான் இந்தப் பாதிப்பு என்றும், இப்போது பல சலுகைகளுடன் ஜியோ சேவை அளித்து வருவதினால் அதிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வாடிக்கையாளர்கள் ரவுட்டர்கள் வாங்குவதைத் தள்ளிவைத்துள்ளதாகவும் நெட்கியர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி மார்தேஷ் நாகேந்திரா கூறினார்.

ரவுட்டர்கள் விற்பனை

ரவுட்டர்கள் விற்பனை

2016 நவம்பர் மாதம் முதல் ஜனவர் 2017 வரை துவக்க நிலை வைப்பை ரவுட்டர்கள் சேனல் டிஸ்டிரிபூட்டர்கள், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணையதள நிறுவனங்கள் என ஆனவரிடமும் தேக்கம் அடைந்துள்ளது.

ஜிஃபை விற்பனை

ஜிஃபை விற்பனை

ஜியோ நிறுவனமும் 2016-2017 நிதி ஆண்டில் 3 மில்லியன் ஜியோஃபை சாதனங்களை விற்பனை செய்துள்ளது, இது மூன்றாவது காலாண்டை விட 50 சதவீத விற்பனை அதிகம் என்றும் மூத்த ஆய்வாளர் பவெல் நாய்யா கூறுகிறார். மேலும் வருகின்ற ஜூன் மாத காலாண்டு வரை ரவுட்டர் விற்பனை மந்தமாகவே தான் இருக்கும் என்று அவர் கூறினார்.

100% கேஷ்பேக் ஆஃபர்

100% கேஷ்பேக் ஆஃபர்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று ரவுட்டர்கள் சந்தையை மேலும் அதிர வைத்தது ஜியோ நிறுவனத்தின் 100 சதவீத கேஷ்பேக் ஜியோஃபை ஆஃபர். இந்த ஆஃபரின் மூலம் பழைய டேட்டா கார்டுகளைத் திருப்பி அளித்தால் 100 சதவீதம் கேஷ்பேக் ஆஃபருடன் ஜிஃபை சாதனம் வழங்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here