செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பாண்டியன் நடத்தும் பங்ஷனில் வெளிவரப் போகும் ரகசியங்கள்.. தங்கமயிலுக்கு நாத்தனார் வைத்த செக்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு அரசிடம் தேவை இல்லாமல் சேட்டை பண்ணுகிறார் என்று ராஜிக்கு தெரிந்து விட்டது. அதை உடனே கண்டித்து விட வேண்டும் என்பதற்காக குமரவேலுவை பார்த்து ராஜி திட்டுகிறார். அந்த நேரத்தில் ராஜியின் அப்பா முத்துவேலு வந்து விடுகிறார். பிறகு ராஜி நடந்த விஷயத்தை அவரிடம் சொல்லி போய்விடுகிறார்.

வீட்டிற்குள் வந்த முத்துவேல், குமரவேலுவை கண்டிக்கும் விதமாக கல்யாணம் நடக்கும் வரை கொஞ்சம் அமைதியாக இருக்க மாட்டியா? ஏதாவது பிரச்சனை பண்ணிக் கொண்டே தான் இருப்பியா? இப்படி இருந்தால் எப்படி உனக்கு கல்யாணம் நடக்கும். ஏன் தேவையில்லாத பிரச்சினைகளை பண்ணுகிறாய் என்று கண்டித்து பேசுகிறாய்.

அப்பொழுது அங்கே வந்த சக்திவேல் என்னாச்சு என்று கேட்கும் பொழுது குமரவேலு நான் எதுவும் பண்ணவில்லை. தேவையில்லாமல் ராஜி தான் என் மீது தவறான பழியை போடுறாள். அதைக் கேட்டு பெரியப்பாவும் என்னை திட்டுகிறார் என்று சொல்கிறார். உடனே சக்திவேல், நீங்க எப்போதுமே உங்க பொண்ணுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க.

என் பையனை நம்பவே மாட்டீங்க. ஓடிப் போனாலும் உங்க பொண்ணு தான் உங்களுக்கு முக்கியம் என்பதற்கு ஏற்ப பேசி ஒரு சண்டையை இழுத்து விட்டார். இந்த சண்டை எங்கே பெருசாக முடிந்து விடுமோ என்ற பயத்தில் அப்பத்தா வழக்கம்போல் நெஞ்சு வலிக்குது என்ற ஒரு ட்ராமாவை போட்டு அந்த சண்டையை பெருசாக்காமல் முடித்து விடுகிறார். அடுத்ததாக ராஜி அந்த கண்ணனை பிடிக்கப் போகும் பொழுது கீழே விழுந்ததால் கையில் அடிபட்டுவிட்டது அதற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த கதிர், ராஜியை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். அடுத்ததாக பாண்டியன் வீட்டிற்கு வந்திருக்கும் குழலி நாத்தனார் கெத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தங்கமயில் இடம் அது சமைச்சுத்தா இது சமைச்சுத்தா என்று ஆர்டர் போட்டு படுத்துகிறார். தங்கமயிலும், குழலியை பார்த்து பயப்படும் அளவிற்கு நடுநடுங்கி எல்லா வேலையும் செய்கிறார்.

அடுத்ததாக கோமதி தாலி பெருக்கு ஃபங்ஷனுக்காக பேங்கில் இருக்கும் நகையை எடுத்துட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார். நகை என்று சொன்னதும் தங்கமயிலுக்கு பயம் வந்துவிட்டது. ஒரிஜினல் நகை இல்லை போலி நகை என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் நானும் வருகிறேன். எல்லா நகையும் எடுத்துட்டு எப்படி தனியாக வருவீங்க என்று சொல்கிறார்.

இதைக் கேட்டதும் குழலி, நீ சொல்வதும் கரெக்ட் தான் அதனால் நானே கூட போயிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி தங்கமயிலுக்கு ஒரு செக் வைத்து விடுகிறார். அடுத்ததாக பாண்டியன் நடத்தப்போகும் தாலி பெருக்கு ஃபங்ஷனில் தங்கமயில் ரகசியங்கள் வெளிவரப் போகிறது. போட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என்ற விஷயம் நாத்தனார் மூலம் தெரியவரப்போகிறது. ஆனாலும் இந்த பாக்கியம் அந்த விஷயத்தை எப்படியாவது சமாளிக்கும் விதமாக பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுருவார்.

- Advertisement -

Trending News