சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் ‘வேலைக்காரன்’ ஷுட்டிங் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தது. ஏன்யா இந்த பாஸ்ட் டென்ஸ்? ஒண்ணுமில்ல… கடந்த 24 மணி நேரமாக அப்படத்தின் ஷுட்டிங்கில் நயன்தாரா இல்லை. அவர் இல்லாத காட்சிகளை மட்டும் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடுவில் எங்கு போனார் நயன்? இதே ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பில் தடுமாறி விழுந்துவிட்டாராம் அவர். இடுப்பிலும் முதுகிலும் பலத்த உள் காயம். பதறிய படக்குழுவினரிடம் பெரிதாக ரீயாக்ஷன் காட்டிக் கொள்ளாத நயன், அடுத்த வினாடியே கேரவேனில் தஞ்சம் ஆகியிருக்கிறார். பின்பு இயக்குனரை மட்டும் உள்ளே அழைத்தவர், “இப்ப இருக்கிற நிலைமைக்கு மறுபடியும் நான் எப்போ ஷுட்டிங் வருவேன்னு சொல்ல முடியல. சில நாட்கள் வர முடியாமல் போனால் பொறுத்துக் கொள்ளணும்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.

சென்னையிலிருக்கும் பிரபல மருத்துவமனையிலிருந்து பிசியோ தெரபி மருத்துவர் ஒருவர் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை தொடர்கிறதாம். நேரடியாக மருத்துவமனைக்கு போய் அட்மிட் ஆனால், இல்லாத கதை கட்டுவார்கள் என்பதால்தான் இந்த ரகசிய சிகிச்சை.

உடம்புக்கு வந்தா கூட ஊர் வாயை பற்றி யோசிக்கிற நிலைமையில்தான் இருக்கு செலிபிரிட்டிகளின் சூழ்நிலை. ஐயோ பாவம்!