Connect with us
Cinemapettai

Cinemapettai

england-cricket-team

Sports | விளையாட்டு

பெவிலியனில் இருந்து வீரர்களுக்கு அனுப்பப்பட்ட ரகசியக் தகவல்.. பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்ட கிரிக்கெட் அணி!

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மீதமுள்ள போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.

முதல் இருபது-20 போட்டியில் வீரர்களுக்கு ரகசிய கோட் மெசேஜ்களை அனுப்பி இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் புதிய சிக்கலில் மாட்டி இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் இயான்நிர்வாகிகள், மாற்று வீரர்கள் பெவிலியனில் இருக்கும் பால்கனியில் அமர்ந்துகொண்டு தகவல்களை பரிமாறிக்கொண்டனர்..

போட்டியின் நடுவே இங்கிலாந்து அணி நிர்வாகிகள் மூலம் இந்த கோட் மெசேஜ் அனுப்பப்பட்டது. சிறிய சிறிய கார்ட் போர்டுகளில் வித்தியாசமான கோட்கள் அச்சிடப்பட்டு அது கேப்டனை இயான் மோர்கனிடம் காட்டப்பட்டது. பெவிலியனில் இருந்து அணியின் பயிற்சியாளர் இதை கேப்டனிடம் காட்டினார்.

C3, 4E போன்ற வித்தியாசமான கோட்கள் இந்த அட்டைகளில் எழுதப்பட்டு
இருந்தது. அடுத்த ஓவரில் எந்த பவுலர் பவுலின் செய்ய வேண்டும். எப்படி பீல்டிங் செய்ய வேண்டும். எங்கு வீரர்களை நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த கோடிங் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கிரிக்கெட் வல்லுனர்கள் இங்கிலாந்து அணி செய்தது தவறு என்றும் அவர்கள் ஐசிசி விதியை மீறிவிட்டனர், இதற்காக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

Coach-cinemapettai.jpg

Coach-cinemapettai.jpg

Continue Reading
To Top