Connect with us
Cinemapettai

Cinemapettai

rk-suresh-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகருக்கு நடந்த ரகசிய திருமணம்.. குழப்பத்தில் ஆழ்ந்துள்ள திரையுலகினர்!

தமிழ் திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் தான் ஆர்கே சுரேஷ். அதாவது பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ஆர்கே சுரேஷ் ‘மருது’, ‘பேச்சி’ போன்ற படத்தில் நடித்தும் உள்ளார்.

இதனையடுத்து தற்போது வில்லன், கதாநாயகன் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்கே சுரேஷ். இந்நிலையில் தற்போது ஆர்கே சுரேஷுக்கு ரகசியமாக திருமணம் நடந்திருப்பது திரையுலகினரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது ஆர்கே சுரேஷ்க்கும், பைனான்சியர் மது என்பவருக்கும் இன்று ரகசியமாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. ஏற்கனவே திவ்யா என்ற சீரியல் நடிகையுடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தத் திருமணம் பாதியிலேயே காரணம் தெரியாமல் நின்று போனது.

இந்நிலையில் திடீரென திரையுலகினர் யாரும் பங்கேற்காமல் நடைபெற்ற இந்த திருமணத்தில் 15 பேர் மட்டுமே பங்கேற்று உள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இவ்வாறு இருக்க திரையுலகினர் யாரும் பங்கேற்காமல் திடீரென எதற்காக ரகசியமாக இந்த திருமணம் நடைபெற்றது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் சினிமா வட்டாரங்கள்.

மேலும் ஆர்கே சுரேஷ் விரைவில் இதைப்பற்றி செய்தியை வழங்குவார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

rk-suresh

rk-suresh

Continue Reading
To Top