fbpx
Connect with us

Cinemapettai

தடுமாறும் ஹீரோ.. ஆதிக்கம் செலுத்தும் தம்பி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தடுமாறும் ஹீரோ.. ஆதிக்கம் செலுத்தும் தம்பி

2019ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த பல படங்கள் தோல்வி அடைந்தது. கடந்த வாரம் வெளியான இரண்டு திரைப்படங்களுக்கும் அதே நிலைமைதான் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்கள் பெரிதும் நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் ஹீரோ. இதுவரை சூப்பர் ஹீரோ சம்பந்தப்பட்ட கதையில் வெளிவந்த தமிழ் படங்கள் எதுவும் வெற்றி அடையவில்லை என்ற கருத்தை உடைக்கும் வகையில் இந்தபடம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்திற்கு வெளிவந்த கலவையான விமர்சனங்களால் வசூலில் பெரிய அடி வாங்கியுள்ளது. முதல் மூன்று நாட்களில் 10 கோடி வரை வசூலித்த ஹீரோ படம் அடுத்த ஐந்து நாட்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் பல தியேட்டர்களில் ஹீரோ படத்தை நீக்கிவிட்டு தம்பி படம் திரையிடப்பட்டு வருகிறது.

தற்போது வரை ஹீரோ திரைப்படம் தமிழகம் முழுவதும் 16 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் கார்த்தி நடிப்பில் ஃபேமிலி சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையில் வெளிவந்த தம்பி திரைப்படம் தற்போது வரை 10 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பெரிய திரைக்கு தம்பி இந்த வாரத்திலிருந்து மாற்றப்படும் என வெளிப்படையாக ட்விட்டரில் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே கதை திருட்டு வழக்கில் சிக்கிய ஹீரோ திரைப்படம் தற்போது வசூலில் அடி வாங்குவதால் தயாரிப்பாளர் தரப்பு கலக்கத்தில் உள்ளது.

https://twitter.com/NikileshSurya/status/1209768655140974597?s=20

இருந்தும் இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் தம்பி படத்தை விட ஹீரோ படம் அதிக வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top