ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

அமீரை தொடர்ந்து நேரடியாக பைனலுக்கு சென்ற போட்டியாளர்.. எவ்வளவு கேவலப்படுத்தியும் அசரல

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் ஒரே வாரத்தில் நிறைவடைய உள்ளதால் போட்டிக் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த வாரத்திற்கு முன்பு நடந்த டாஸ்க்கின் மூலம் 12 லட்சத்துடன் வெளியேறிய சிபி உடன் அமீர் கடுமையாக போட்டியிட்டு டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்கு சென்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது நபர் ஒருவர் தேர்வாகியுள்ளார். இதுவரை நடந்து முடிந்த எந்த சீசனிலும் கொடுக்காத வாய்ப்பை இந்த சீசனில் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கொடுத்துள்ளார். ஏனென்றால் அமீருடன் பைனலுக்கு செல்ல வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நபரை தேர்வு செய்து, அவரது தலையை பன்னீர் மற்றும் ரோஸ் இதழ்களை தூவ வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்தார்.

அந்த நபர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான முகத்தை மறைத்து இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருக்கிறார் என்று தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யும் நபர் அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்து, இறுதி வாரத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறுவார். எனவே இத்தகைய வாய்ப்பு கடுமையான வாக்கு வாதத்திற்கு பிறகு நிரூப்பிற்கு கொடுக்கப்பட்டது.

தொடக்கத்தில் போட்டியாளர்கள் பாவனி பெயரை மட்டுமே சிபாரிசு செய்து, அவருடைய தலையில் பன்னீர் தெளித்து ரோஸ் இதழ்களை தூவினர். இருப்பினும் போட்டியாளர்கள் சொன்ன காரணத்தை பிக்பாஸ் ஏற்க மறுத்துவிட்டார்.

பின்பு நிரூப்பின் கடுமையான வாக்கு வாதத்திற்கு பிறகு, இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு நிரூப்பை ராஜுவை தவிர வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மனமுவந்து பைனலுக்கு அனுப்பாமல், ஏதோ கடமைக்கு தேர்வு செய்தனர் எப்படியோ தன்னுடைய தரைமட்டமான ஸ்டேட்டஜி மூலம் பைனலுக்கு சென்ற நிரூப் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

எலிமினேஷனில் இருந்து தப்பித்தோம் என்ற எண்ணத்தில், எவ்வளவுதான் அசிங்கப் பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பைனலுக்கு சென்று விட்டோம் என்று நிரூப் மன மகிழ்ச்சி அடைகிறார்.

அத்துடன் ‘இதற்கெல்லாம் உனக்காக தான் பாப்பா, என்று இறுதியில் நிரூப் யாஷிகாவை நினைத்து மனமுருகி தனியே அமர்ந்து பேசியது ரசிகர்களை உருக்கியது.

- Advertisement -spot_img

Trending News