திருவண்ணாமலையை சேர்ந்த பட்டதாரி வாலிலபர் கொளஞ்சியப்பன். அரசு அலுவலகங்களுக்கு சென்று வினோதமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்து அனைவரது கவனத்தையும்  ஈர்ப்பது இவரது வழக்கம்.

இந்நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று திடீரென தலைகீழாக நின்றார்.

இதுகுறித்து அவரிடம் அப்பகுதியினர் விசாரித்தபோது, மூலிகை நீரை வானத்தில் தெளித்தால் மழை பெய்யும், பூமியை குளிர்ச்சியாக்க என்னால் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது இந்த திட்டத்தை கலெக்டர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இவரது வினோத செயலை கண்டு பொதுமக்கள் அங்கு கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்தனர்.

போலீசாருடன் கொளஞ்சியப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடார். இதனால் கொளஞ்சியப்பனை போலீசார் கைது செய்து காவல்நிலைத்துக்கு அழைத்து சென்று கண்டித்து விடுவித்தனர்.