Sports | விளையாட்டு
இந்திய அணியில் வாய்ப்பு இல்லனா நாங்க இருக்கோம்.. பகிரங்கமாக சூர்யகுமார்க்கு அழைப்பு விடுத்த பிரபலம்
48வது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின.
அதில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய சூரியகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை அணி வெற்றி பெற்றது.
மும்பை அணி ஒரு பக்கம் விக்கட்டுக்களை இழந்த நிலையில் இன்னொரு பக்கம் சூர்யகுமார் யாதவ் தனியாளாக 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவரது அபார இன்னிங்சை பார்த்து முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் சூரியகுமார் யாதவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் சூரியகுமார் யாதவ் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது.
நியூசிலாந்து நாட்டின் ஸ்காட்ஸ் ஸ்டரீஸ் இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டால் சுரேஷ்குமார் யாதவ் தாராளமாக நியூசிலாந்து அணிக்காக விளையாடலாம் என அழைப்பு விடுத்தார்.
நியூஸிலாந்து அழைப்பை ஏற்று நியூசிலாந்து அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

scott-styris
