Sports | விளையாட்டு
கோலி அடித்த ஒரு ஷாட்! ஷாக் ஆன மைதானம்! யாரிடம் கற்றது தெரியுமா
இந்திய டீம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளனர். ஒரு நாள் போட்டிகள் தொடரில் ஒரு ஆறுதல் வெற்றி மட்டுமே பெற்று தொடரை இழந்தனர். டி 20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஜெயித்து தொடரை வென்றுள்ளனர்.
டாஸ் வென்று கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா 194 ரன்கள் குவித்தனர். நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். சூப்பர் பேட்டிங் பிட்ச், எனவே இந்திய அதிரடியாக ஆடி, 19 . 4 ஓவரில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அனைவரும் பேட்டிங்கில் கலக்க, பாண்டியா அதீதமாக தெறிக்கவிட்டார். 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 22 பாலில் 42 எடுத்த பாண்டியா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
சேஸிங்கில் என்றுமே கிங் தான் கோலி. வழக்கமான அதிரடி பாணியில் 24 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 40 ரன்கள் விளாசினார். எனினும் அவர் ஆண்ட்ரே டை வீசிய இவரில் ஸ்கூப் ஷாட் ஆடினார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.
கோலி பந்தை கடைசி வரை பார்த்து, அதன் மெரிட் அடிப்படையில் தான் ஷாட்ஸ் ஆடுவார். முன் கூட்டியே தீர்மானித்து அடிவைத்து மிகவும் அரிது. எனினும் 14 ஓவர் முடிந்த நேரத்தில், கடைசி 36 பாலில் 72 ரன் தேவை பட்டது. கோலி பாண்டியா ஆட, டை ஓவர் வீசினார். அந்த ஓவரில் 18 ரன்கள் எடுத்தனர். ஓவரின் நான்காவது பந்தில் கோலி ஸ்கூப் செய்து சிக்ஸ் அடித்தார்.
போட்டி முடிந்த சமயத்தில் அவர் பேசிய பொழுது இந்த ஷாட் பற்றி சொன்னது பின் வருமாறு .. “அது (ஸ்கூப்) ஏ பி (டிவில்லேர்ஸ்) ஷாட் தான். நான் பாண்டியவிடம் பௌலர் இந்த ஷாட்டை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றேன், நானே எதிர் பார்க்கவில்லை என்றார் பாண்டியா. இன்று ஏ பிக்கு மெஸேஜ் செய்து, அவர் அந்த ஷாட்டை பற்றி என்ன நினைக்கிறார் என கேட்பேன்.” என கூறியுள்ளார்.

Scoop over fine leg by kohli
இத்தனை வருடங்கள் ஐபிஎல் இணைந்து ஆடிய கோலி, இந்த லாக் டவ்ன் சமயத்தில் டிவில்லேர்சிடம் இருந்து இதை கற்றுக்கொண்டார் என நெட்டிசன்கள் சொல்கின்றனர்.
