அட ஆமாங்க, இப்படி ஒரு  சம்பவம் கேரளாவில், திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

பிச்சை எடுப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று பெரும்பாலானோருக்கு தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலையே ஒருவரை கால் வயிறு உணவிற்காக பிச்சை எடுக்க வைக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு, நவம்பர் 5, வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது ரயில் நிலையத்தின் வாசலில் பெண் ஒருவர் அழுக்கு துணி அணிந்திருந்து பிச்சையெடுத்து கொண்டிருந்ததையும், மரத்தில் இருந்த பழங்களை பறித்து கொண்டிருந்ததையும் வித்யா பார்த்துள்ளார். அவரிடன் சென்று பேச முடிவெடுத்த வித்யா குடும்ப விபரங்கள் குறித்து கேட்டுள்ளார்.

பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண், கணவர் மற்றும் மகனால் கைவிடப்பட்டவர் என வித்யாவுக்கு தெரியவந்தது. பின்னர் ஓட்டலிலிருந்து இட்லி மற்றும் வடைகளை அப்பெண்ணுக்கு வித்யா வாங்கி கொடுத்துள்ளார். அவர் பேசிய விதத்தை பார்த்து நன்கு படித்தவர்(M.SC.,B.Ed) என்பதை உணர்ந்த வித்யா மேலும் விசாரித்துள்ளார்.
அப்போது தான், வடக்கு கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பொது பள்ளியில்  கணக்கு ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது. பிச்சையெடுத்தவரின் பெயர் வல்சா (63) என்பதை அறிந்த வித்யா அவரை புகைப்படம் எடுத்து; அவர் நிலையை விளக்கி பேஸ்புக்கில் பதிவிட்டார். இதை பார்த்த வல்சா பணியாற்றிய பள்ளியின் மாணவர்கள் பலர் அவரை கவனித்து கொள்ள முன்வந்தனர்.

Valsala Ammal

ஆனால், அவர்களுடன் போக மறுத்த வல்சா தனது கணவர் மற்றும் மகனுடன் மட்டுமே செல்வேன் என கூறிவிட்டார். தற்போது வல்சாவின் சகோதரி மற்றும் உறவினர்களும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட துணை ஆட்சியர் மூலம் வல்சா அங்கிருந்து மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் கணவர் மற்றும் மகனை தேடும் பணி நடந்து வருகிறது.

Valsala

ஒவ்வொரு முறையும் பிச்சைக்கார்களை பார்க்கும்போது, ஏனோ இனம்புரியாத அனுதாபங்கள் வரத்தான் செய்கிறது. இப்போ சொல்லுங்க சமூகத்துல எதை எதையோ தேடி அலையுற நாம, சில நேரத்துல நம்மை நல்ல நிலைமைக்கு ஆளேற்றிய நபர்களையே மறந்து விடுறோம். எதாவது தப்பு நடந்தா, அத பார்த்து “மறித்துவிட்டது மனிதநேயம்” என்று கூச்சலிட மட்டும் தான் நமக்கு தெரியும். வித்யா போன்ற நல்ல உள்ளங்கள் பல நேரங்களில் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விடுகின்றனர்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

(துன்பப் பட்டு அதனை பொறுக்காமால் சிந்தும் கண்ணீர் – எந்தவோர் பேரரசையும் அழிக்கும் படையாகும்) (அதிகாரம்: கொடுங்கோன்மை குறள் எண்:555)

Credits- Facebook