ஈரோடு : கோடை வெயில் வரலாறு காணாத வகையில் மிக அதிகமாக தகித்து வருகின்றது.

ஆந்திராவில் இயல்புக்கு அதிகமாக அடிக்கும் வெப்பம் மற்றும் வடமேற்கு காற்றால், அங்கிருந்து வரும் வெப்பத்தால், தமிழகத்தையும் வெப்பம் அதிகமாக பாதித்துள்ளது. இதன் காரணமாக அனல் காற்று தொடர்ந்து வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் கோடை கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. பெரியவர்களே தாங்கமுடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால் பிரச்னை ஏற்படுமே என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.

பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக வந்த புகாரை நீதிபதி மாசிலாமணி குழு ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.