ஒரு வருடத்தில் ஹாலிவுட் படங்களில் அதிகமாக வசூல் செய்த 10 படங்கள் என கணக்கு எடுத்தால் அதில் முக்கால்வாசியை ஆட்கொள்வது DC மற்றும் மார்வெல் காமிக்ஸின் படங்களாக தான் இருக்கும்.

மார்வெல் ஸ்டூடியோ

மார்வெல் ஸ்டுடியோஸிற்கென்று தனி வெறியர் கூட்டமே உலகெங்கும் உள்ளது. பல சூப்பர் ஹீரோக்கள் இணைந்து நடித்து வெளிவந்த படம் தான் அவென்ஜ்ர்ஸ். இதற்கு முன் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அவெஞ்சர் படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 27 வெளியாகிறது.

பிரமாண்ட காட்சிகள் பிரமிப்பூட்டும் தொழில்நுட்பம் என இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் இப்படத்தின் ட்ரைலரை ரி ஷூட் செய்துள்ளனர். மேலும் அதனை ட்விட்டரில் அப்லோட் செய்தனர். சில மணி நேரங்களில் இவர்கள் உலக பிரசித்தி ஆகிவிட்டனர்.

இந்த ட்ரைலரை பாராட்டி படத்தின் இயக்குனர்கள் கூட அடுத்த பாகம் இயக்க வருகிறீர்களா என டீவீடீயுள்ளனர்.

இது தான் ஒரிஜினல் ட்ரைலரின் லிங்க் ..

Avengers: Infinity War படத்தின் ட்ரைலர்.!