Tamil Nadu | தமிழ் நாடு
பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கலாம்.? முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்த பட்ட நிலையில், கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களைத் திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று அனுமதி அளித்திருந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளைத் திறப்பதற்கு தற்போது சாத்தியமில்லை என்றும், இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முடிவு செய்யப்படும்.
மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

senkottaiyan
