மும்பை: பியா அல்பெலா டிவி தொடரில் நடிகர் அக்ஷய் நிர்வாணமாக வந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் இல்லாமல் இருக்க முடியாது என்கிற அளவுக்கு பல பெண்கள் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளனர். டிவி தொடர்களில் நல்லதையும் காட்டுகிறார்கள், கெட்டதையும் காட்டுகிறார்கள்.

ஜீ டிவியில் பியா அல்பெலா என்கிற இந்தி தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நரேனாக நடித்து வரும் அக்ஷய் மாத்ரே நிர்வாணமாக நடித்துள்ளார்.

 

அக்ஷய் டிவியில் நிர்வாணமாக வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்ஷய் காட்சிப்படி வீட்டை விட்டு வெளியேறும்போது நிர்வாணமாக செல்கிறார்.

 

நான் ஒரு காட்சியில் நிர்வாணமாக வர வேண்டும் என்று என்னிடம் கூறியபோது இது ஜோக் என்று நினைத்து சிரித்தேன். அதன் பிறகு நிஜமாகத் தான் சொல்கிறார்கள் என்பததும் டென்ஷனானேன் என அக்ஷய் தெரிவித்துள்ளார்.

 

நான் கூச்ச சுபாவம் உள்ளவன். பெண்களை இம்பிரஸ் செய்ய சட்டையை கூட கழற்ற மாட்டேன். அதனால் இந்த காட்சி குறித்து அதிர்ச்சி அடைந்தேன் என அக்ஷய் கூறியுள்ளார்.

 

நிர்வாண காட்சி ரொம்ப முக்கியம் என்பதை அறிந்து நடித்தேன். நான் அந்த காட்சியில் நடித்தபோது ஒளிப்பதிவாளர் மட்டும் தான் அங்கு இருந்தார் என்கிறார் அக்ஷய்