அனைவருக்கும் ஆப்பு வைத்தது ஸ்டேட் பேங்க் வங்கி..! மக்கள் அனைவரும் கவலை..!

டெல்லி: வரும் ஜூன் மாதம் முதல் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி இன்று இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஜூன் மாதம் முதல் சேவைக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. அதன்படி, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதெல்லாம் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் கட்டணம் வங்கிக்கணக்கிலிருந்து தானாகேவ கழித்துக்கொள்ளப்படும். இந்த கட்டணம் ஒரு மாதத்தில் 4 முறை பணம் எடுப்பதற்கு மட்டுமே. அதற்கு மேல் பணம் எடுக்கும்போது 50 ரூபாய் வசூலிக்கப்படும்.

ஸ்டேட் வங்கியின் இந்த புதிய கட்டண வசூல் முறை அடுத்த மாதம் முதல் தேதியிலேயே அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையைத் ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments

More Cinema News: