Sayyeshaa

மும்பையைச் சேர்ந்த சாயிஷா, ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

தான் ஆடிய நடன வீடியோவை நடிகை சாயிஷா சைகல் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Sayyeshaa

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சாயிஷா சைகல். இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  டுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை

விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடிகை நேகா ஷர்மா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். ‘காஷ்மோரா’ படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படம் ஜுங்கா.

Sayyeshaa

விஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சாயிஷா சைகல், டுவிட்டரில் அவ்வபோது தன் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிடுவார். தற்போது இவர் தான் ஆடிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இவரின் நடனத்தை கண்டு நானே அசந்துள்ளேன் என பிரபுதேவா கூறினார. தற்போது இந்த வீடியோவை பார்த்தால் நீங்களே அசந்துவிடுவீர்கள்.