Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவின் “சொடக்கு மேல” பாடலுக்கு குத்தாட்டம் போடும் சாயீஷா
Published on

சாயீஷா
சாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது.
கோலிவுட்டில் முன்னை ஹீரோயின்கள் 30 வயதை கடந்து விட்டனர். மேலும் ஹீரோயினுக்கு முக்கியதுவம் படங்களையே விரும்புகின்றனர். சம்பளமும் கோடிகளில் கேட்கின்றனர். இந்நிலையில், நடிப்பு, நடனம், கவர்ச்சி என்று முழுவீச்சில் கோலிவுட் களத்தில் குதித்துள்ளார் சாயீஷா.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உள்ள சொடக்கு பாடலுக்கு டான்ஸ் ஆடி அதனை தன் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இவரின் நடனத்தை பார்த்து அசந்து போயுள்ளனர் நம் நெட்டிசன்கள்.
