vanamagan

ஜெயம் ரவி மாதிரி ஒரு நடிகர் கிடைப்பது வரம் என்று வனமகன் படத்தின் நாயகி சயிஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சயிஷா நடித்த வனமகன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் நாயகி மும்பையை சேர்ந்தவர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சயிஷா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்த நிலையில் அகில் எனும் தெலுங்கு படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அகில் படத்தை பார்த்த இயக்குநர் ஏ.எல்.விஜய் தற்போது வனமகன் படத்தில் நடிக்க வைத்துள்ளார். அகிலை தொடர்ந்து ஷிவாய் எனும் பாலிவுட் படத்திலும் சாயிஷா நடித்துள்ளார். அதன் பின்னர் வனமகன் மூலம் தமிழில் அறிமுகமானார். வனமகன் படம் மூலமாக தமிழில் அறிமுகமானது மிகவும் மகிழ்ச்சி என சயிஷா கூறியுள்ளார். மேலும் கோலிவுட்டில் அறிமுகமாகும் ஹீரோயின்களுக்கு ஜெயம் ரவி மாதிரி ஹீரோ கிடைப்பது வரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வனமகனை தொடர்ந்து பிரபு தேவா இயக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா எனும் படத்தில் சயிஷா நடிக்கிறார். இதில் கார்த்தி மற்றும் விஷால் நடிக்கின்றனர். வனமகன் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்ததை தொடர்ந்து அவர் இயக்கத்திலும் சிறப்பாக நடிப்பேன் என்று சயிஷா கூறியுள்ளார்.