Tamil Cinema News | சினிமா செய்திகள்
பயங்கரமாக கலாய்த்ததால் பிரபல நடிகரின் படத்தை விட்டு ஓட்டம் பிடித்த சாயிஷா.. கவலையில் ஆர்யா!
இளம் வயதிலேயே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாயிசா. மேலும் 23 வயதில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் வயது விகிதம் அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது.
திருமணமாகி நீண்ட நாட்களாக ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் சாயிஷா.
அந்தவகையில் அடுத்ததாக 66 வயதான பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.
66 வயது நடிகருடன் ஜோடி போடுவதால் சமூகவலைதளத்தில் சாயிசாவை பயங்கரமாக கலாய்த்து விட்டனர். இதனால் வருத்தப்பட்ட சாயிசா தேதிகளை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து ஒதுங்கி விட்டாராம்.
ஆனால் உண்மையான காரணம் சமூக வலைத்தளத்தில் அதிக கேலி கிண்டல் செய்ததால் தான் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

sayeesha-cinemapettai
இருந்தாலும் பெரிய சம்பளத்தில் பேசப்பட்ட அந்த படம் கை நழுவிப் போன வருத்தத்தில் இருக்கிறாராம் ஆர்யா.
