வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சாவித்ரியின் பேரன் அபினய் பட வாய்ப்பை தட்டிப்பறித்த மற்றொரு வாரிசு நடிகர்.. சூப்பர் ஹிட் படமாச்சு!

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் சில நாட்களாகவே கதை சொல்லட்டுமா என்கிற டாஸ்கின் மூலம் நிகழ்ச்சியை நகர்த்தி வருகின்றனர். போட்டியாளர்கள் தங்களுக்கு நேர்ந்த நிகழ்வுகளைப் பற்றி மிகவும் உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் அபினய் கடந்து வந்த பாதையை பற்றி கூறும் போது அனைவரும் சோகம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து அபினய் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்து விட்டார். அவர் தனது முதல் படம் ராமானுஜம் அல்ல என்றும் இதற்கு முன்னதாகவே தனக்கென்று ஒரு பட வாய்ப்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ராமானுஜம் திரைப்படம் தனக்கு கிடைப்பதற்கு தான் ஜெமினிகணேசன் சாவித்திரியின் பேரன் என்று கூறிய பிறகே இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாக மிகவும் வருத்ததுடன் கூறியிருந்தார்.

ஏனெனில் ராமானுஜம் படவாய்ப்பு இவரின் தாத்தா, பாட்டியால் இவருக்கு கிடைத்ததே தவிர, இவரின் திறமையால் அல்ல என்பதை சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்திற்கு முன்பு இவருக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை வேறு ஒரு பிரபல நடிகரின் பேரன் நடித்துவிட்டார் என்பதையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஆனால், அந்த நடிகர் யார் என்பதையும் அந்த படத்தின் இயக்குனர் யார் என்பதையும் நேரடியாக அபினய் கூறவில்லை. அதே சமயம் அபினய், மிகவும் வைராக்கியமாக அதே இயக்குனர் என்னை வைத்தும் படம் எடுப்பார் என்று உறுதியாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த பிற போட்டியாளர்களும் அவருக்கு ஆதரவளித்தனர்.

kumki-cinemapettai
kumki-cinemapettai

தற்போது ரசிகர்களின் கவனத்தை அபினய் இதன்மூலம் கவர்ந்து விட்டார். ஆனால் இவர் கூறவந்த நடிகர் விக்ரம் பிரபு. ஏனெனில், இவரே நடிகர் சிவாஜி கணேசனின் பேரனாவார். ராமானுஜன் திரைப்படத்திற்கு முன்பு நடிகர் விக்ரம் பிரபு நடித்த கும்கி திரைப்படம் வெளியாகி விட்டது.

கும்கி திரைப்படத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க அபினய் கமிட் ஆகி இருக்கலாம் என்றும் அதனை நடிகர் விக்ரம் பிரபு தட்டிப் பறித்து நடித்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சூப்பர் ஹிட் படமான கும்கி படத்தில் அபினய் நடித்திருந்தால் நிச்சயம் அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.

- Advertisement -

Trending News