சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் நடிகையர் திலகம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும் நடிகை சாவித்திரி. முதல்முறை அவருக்கு கிடைக்கப்பட்டது துணை நடிகை வேடம் தான். ஆனால், படத்தின் நாயகி இயக்குனருடன் சண்டைப் போட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால், இயக்குனர் விடாப்படியாக இரண்டாவது நாயகியான சாவித்ரிக்கு நாயகி வேடம் கொடுத்தார். அவரின் நம்பிக்கையை வீணாக்காமல் படம் அமோக ஹிட் அடித்தது. சாவித்ரியின் அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என எல்லா பக்கங்களிலும் வெற்றி கொடி நாட்டினார்.

தொடர்ந்து, 20 வருடமாக சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தார். ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இதன்பின், அவர் வாழ்வே சூனியமானது. தொடர் தோல்வி, காதல் கணவரின் பிரிவு, பண நட்டம் ஆகியவற்றால் தன் ஆசையை மது மீது திருப்பினார். அதை தொடர்ந்து, அதுவே சாவித்ரி என்னும் நடிகையை தன்னுடன் எடுத்துக்கொண்டது. அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் சாவித்திரியின் அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அவரது நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திக்கொண்டிருக்கின்றன.

அதிகம் படித்தவை:  அப்போ அது நடிப்பா? கீர்த்தி சுரேஷை கமெண்ட் செய்த விஜய்

இத்தகைய, வரலாற்றை கொண்ட சாவித்ரியின் வாழ்க்கை தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் திரைப்படமாக உருவாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் சாவித்ரியின் வேடத்தை ஏற்று இருக்கிறார். அவரின் காதல் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தாவிற்கு படத்தில் பத்திரிக்கையாளர் வேடம் என அறிவிக்கப்பட்டு விட்டது. வெற்றி நாயகியான சாவித்ரியுடன் பல சாதனை நாயகர்கள் நடித்திருப்பர். இது வரலாற்று படம் என்பதால் அவர்களையும் காட்சிப்படுத்த வேண்டியது முக்கியமாகும். சிவாஜி, எம்ஜிஆர், என்டிஆர் உள்ளிட்டவர்களின் வேடத்தில் யார் நடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது.

அதிகம் படித்தவை:  விஜய்60 படத்தின் முக்கியமான ரகசியம் கசிந்தது- இது உண்மையா?

இந்நிலையில், சில நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியாகி இருக்கிறது. ஷாலினி பாண்டே சாவித்ரியின் தோழி சுசீலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசனின் முதல் மனைவி கதாபாத்திரத்தில் மாளவிகா நாயர் நடித்துள்ளார். எஸ் வி ரங்கா ராவ் வேடத்தில் மோகன்பாபுவும், கே வி ரெட்டி வேடத்தில் இயக்குனர் க்ரிஷ் ஜகர்லமுடியும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல, பானுமதியாக அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும், சிவாஜி கணேசன் வேடத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, சிறு சிறு வேடத்தில் கூட பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.