Connect with us

Cinemapettai

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்

நடிகையர் திலகம் படத்தை எல்லாம் சர்ச்சையாக்கி என் அக்காவின் உறவை இழக்க விரும்பவில்லை என நடிகை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்றவர் சாவித்ரி. 60களிலேயே நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியவர். கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருந்தார். இதை தொடர்ந்து, காதல் மன்னன் ஜெமினி கணேசனை காதலித்து கரம் பிடித்தார். அழகாக சென்று கொண்டிருந்த இவர் வாழ்வில் புயல் வீசியது. எடுத்துக்கொண்ட எல்லா படங்களும் தோல்வியை தழுவியது. காதல் கணவரும் இவரை விட்டு விலகினார். இதனால் எப்போதோ அறிமுகமான மதுவை காதலிக்க தொடங்கினார். நாள் முழுதும் அதில் மட்டுமே தன் நேரத்தை செலவழித்தவர். ஒரு நேரத்தில் கோமாவில் சென்று, நினைவு திரும்பாமலே உயிர் துறந்தார். எந்த கோலிவுட்டில் ஆட்சி செய்தாரோ அதே இடத்தில் சம்பாரித்த அனைத்தையும் இழந்து உயிரையும் விட்டார். இத்தனை சர்ச்சைகளை கொண்ட இவர் வாழ்வு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியாகி இருக்கும் இப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. நாக் அஸ்வின் படத்தை இயக்கி இருந்தார். நடிகையர் திலகம் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். பழம்பெரும் நடிகர்களின் கதாபாத்திரத்தை பல நடிகர்கள் ஏற்று இருந்தனர். தெலுங்கில் ஆட்சி செய்த சாவித்ரி, தமிழிலும் வெற்றி கொடி நாட்டியவர். ஆனால், அவரின் தமிழ் திரை வாழ்வு படத்தில் சரியாக காட்சிப்படுத்தவில்லை என புகார் எழுந்தது. அதே வேளையில், காதல் மன்னன் ஜெமினி கணேசன் – சாவித்ரியின் காதலிலும் சில குளறுபடி காட்சிகள் இடம் பெற்றதாக ஜெமினி கணேசனின் முதல் மனைவி மகள்கள் புகார் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாவித்ரிக்கு அப்பாதான் குடிக்க கற்று கொடுத்ததாக படத்தில் இருந்த காட்சி என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரால் எந்த பெண்ணும் பாதிக்கப்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களை தான் திருமணம் செய்து கொண்டார் என ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், இதற்கு பதில் அளித்திருக்கும் சாமுண்டீஸ்வரி, கமலா அக்கா அப்பா ஜெமினி கோணத்தில் இப்படத்தை பார்த்து இருக்கிறார். நான் அம்மா சாவித்ரி கோணத்தில் பார்த்தேன். இதையெல்லாம் சர்ச்சையாக்கி என் அக்கா உறவை இழக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top