Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா? ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் நடிகையர் திலகம் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் அணிந்த உடைகளின் எண்ணிக்கை முன்னணி நடிகைகளை வாய் பிளக்க செய்துள்ளது.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் படத்தை இயக்கி வருகிறார். தமிழின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் சாவித்ரியாக வேடமேற்று இருக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பத்திரிக்கையாளராக சமந்தாவும், சிறப்பு வேடத்தில் ஷாலினி பாண்டே, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவீஸ் – ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
பழம்பெரும் நடிகை சாவித்ரி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு இருக்கிறார். இதனால், அவர்கள் கதாபாத்திரமும் இப்படத்தில் இடம்பெற இருக்கிறது. அதன்படி, என்.டி.ராமராவாக ஜூனியர் என்.டி.ஆரும், நாகேஷ்வரராவாக அவரது பேரன் நாக சைதன்யாவும் நடித்து இருப்பதாக பேச்சுகள் அடிப்படுகிறது. சாவித்ரியின் ட்ரேக்மார்க் கோலிவுட் சினிமா தான். அப்போது, அதன் சூப்பர்ஸ்டார் நாயகர்களான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கதாபாத்திரமும் இப்படத்தில் இடம்பெற இருக்கிறது. சிவாஜி கணேசனாக அவரது பேரன் விக்ரம் பிரபு நடித்துள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில், வெளியாகிய இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் வைரல் ஹிட் அடித்தன. கீர்த்தி, சாவித்ரி வேடத்திற்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என கிசுகிசுக்கள் நிலவிய நிலையில், 80களில் சாவித்ரியின் தோற்றத்தை அசலாக வெளிப்படுத்திய கீர்த்தியின் நடிகையர் திலகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறி இருக்கிறது.

keerthy suresh
இந்நிலையில், இப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில், இப்படத்தில் தனக்கு 120 உடைகள். ஒவ்வொன்றும் வேறு விதமாக இருக்கும். சாவித்ரியின் உடை, நடை, நடிப்பை அப்படியே காப்பியடிக்காமல், என் மனதில் கிரகித்து கொண்டேன். அதன்பிறகே, அவரை என்னால் திரைக்குள் கொண்டு வர முடிந்தது. இப்படத்திற்காக தினமும் 5 மணி நேரம் மேக்கப் போட வேண்டும். ஹேர்ஸ்டைல் முதல் கால் பாதம் வரை பார்த்து பார்த்து சாவித்ரியை உயிருடன் செதுக்கியுள்ளோம். இனி எங்கள் உழைப்பிற்கு ரசிகர்கள் தான் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
இப்படம் மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டம் காரணமாக தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
