அஜித் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான விவேகம் பல்வேறு விமர்சனங்களையும் கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் குறித்த எதிர்மறையான விமர்ச்சனங்கள் படம் வெளியான அடுத்த சில நிமிடங்களில் இருந்தே தொடங்கிவிட்டன.

இதில் மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலுக்காக விவேகம் குறித்து விமர்சனம் செய்திருந்த சாரு நிவேதிதா அதில் தனக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.சாரு நிவேதிதாவின் இந்த விமர்சனத்தால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.இந்நிலையில் அஜித் ரசிகர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், ரசிகர்களை தாங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நடிகர் அஜித்திற்கு சாரு நிவேதிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஒரே நேரத்தில் அஜித்-விஜய் படைத்த சாதனை

மேலும் இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டுவர தாங்கள் என்னுடன் ஒரு செல்ஃபி மட்டுமாவது எடுக்க வேண்டும் என்றும் சாரு நிவேதிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.மறுமுனையில் மாறன் என்னும் சினிமா விமர்சகரையும் அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.