இயக்குநர் ராம் கதாநாயகனாகவும், பூர்ணா நாயகியாகவும் நடிக்கும் படம் சவரக்கத்தி. மிஸ்கின் வில்லனாக நடிக்கிறார். மேலும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தன்னுடைய லோன்உல்ப் புரொடகஷ்ன்ஸ் மூலம் தயாரிப்பதும் அவரே.

இந்தப்படத்தை மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி. ஆர். ஆதித்யன் என்பவர் இயக்குகிறார். இதுவே அவரின் முதல் படம். அதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால் இயக்குனர் மிஷ்கினின் உடன்பிறந்த சகோதரராம். அவருடைய இயற்பெயர் சாமி என்றும் இயக்குநரான பின் பெயரை மாற்றிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

பிசாசு படத்தில் மிஷ்கின் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் அரோல் கரோலி தான் சவரக்கத்தி படத்துக்கும் இசையமைப்பாளர். இந்தப் படத்தில், ‘தங்கக்கத்தி, இரும்புக்கத்தி’,‘அன்னாந்து பார்’ என இரண்டு பாடல்கள் இருக்கின்றன. ‘தங்கக்கத்தி, இரும்புக்கத்தி’ பாடலை எழுதி பாடியுள்ளார், மிஷ்கின். ‘அன்னாந்து பார்’ பாடலை தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுதியிருக்கிறார்.

ஏற்கனவே முதல் லுக் போஸ்டர், இரண்டு டீசேர்கள், ஒரு பாடல் வெளியான நிலையில் இப்படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. படத்தின் வெளியீடு தாமதமாகி வந்த நிலையில் இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆங்கில படங்களை வெளியிடும் “க்ரைக்ஸ் சினி கிரியேஷன்” நிறுவனம் வாங்கியுள்ளது.

அதிகம் படித்தவை:  நடிகர் அவதாரம் எடுக்கும் நஸ்ரியாவின் தம்பி ! போட்டோ உள்ளே !

தற்பொழுது படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

படத்தின் இயக்குனர் ஜி. ஆர். ஆதித்யன், நடிகர் அவதாரமும் எடுத்துவிட்டார். இவர் ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தில் மம்மூட்டி அவர்களின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தான் அது.