Tamil Cinema News | சினிமா செய்திகள்
வில்லனாக மிரட்டும் மிஷ்கினின் சவரக்கத்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மிஸ்கின் படம் என்றாலே வித்யாசமாக தான் இருக்கும் படம் மட்டும் வித்யாசமா இருந்த பரவா இல்லைங்க படத்தோட டைட்டிலும் வித்தியாசமா இருக்கும். இந்த படத்தின் டைட்டில் சவரக்கத்தி.
மிஸ்கின் அவரின் இரண்டாவது படத்தின் தயாரிப்புதான் சவரக்கத்தி,இந்த படத்தை ஜி.ஆர்.ஆதித்யா இயக்குகிறார்.
மிஷ்கின் தனது லோன் வுல்ஃப் புரொடக்ஷன் சார்பாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை எடுத்தது தெரியும். அதில் தயாரிப்பு, இயக்கம், கதை, நடிப்பு எல்லாமே அவர்தான். அதே போல் இந்த படத்திலும் கதை,திரைகதை தயாரிப்பு மிஸ்கின் தான்.
படத்தில் ஹீரோவாக நடிப்பது, இயக்குனர் ராம், நாயகி பூர்ணா. மிஷ்கின் தான் வில்லன்.மிஷ்கின் வில்லனாக தீட்டும் சவரக்கத்தி படத்தின் டைட்டில் மெர்சலாக இருப்பதால் படமும் மிரட்டும் என நினைகிறார்கள் ரசிகர்கள்.

savarakaththi
சவரக்கத்தி படத்திற்கு சென்சார் குழு U சான்றிதழ் கொடுத்துள்ளது.மேலும் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் படத்தை திரையில் காண.
